3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் (Adipurush) திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வருகிறது. பிரபாஸின் 22வது படமான 'ஆதிபுருஷ்' (Adipurush) படத்தை, ஓம் ராவத் என்பவர் இயக்கி வருகிறார். ராமாயணத்தை கதை களமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும், இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார்.
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ் (Prabhas), பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதன் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளம் அதிகரித்துவிட்டது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிஞ்சும் அளவிற்கு அவருடைய அடுத்த படத்திற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபாஸின் 22வது படமான 'ஆதிபுருஷ்' (Adipurush) படத்தை, ஓம் ராவத் என்பவர் இயக்கி வருகிறார். ராமாயணத்தை கதை களமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும், இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக, சைஃப் அலி கானும், சீதையாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வருகிறது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும், இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாத காரணத்தால், ஆதிபுருஷ் (Adipurush) படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க படக்குழு ஆலோசித்து வந்தது.
இந்நிலையில், தற்போது ஆதிபுருஷ் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிவராத்திரி தினமான இன்று அந்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், சன்னி லட்சுமணனாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கிருத்தி சனோன் சீதை வேடத்தில் நடிப்பதாகவும், சைஃப் அலி கான் ராவணன் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
முன்னதாக ஆதிபுருஷ், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் லால் சிங் சத்தாவின் வெளியீட்டிற்கு இடமளிக்க பின்னுக்குத் தள்ளப்பட்டது. கடந்த மாதம், அமீர் கான் புரொடக்ஷன்ஸ் இன்ஸ்டாகிராமில், இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
படக்குழு இன்ஸ்டாகிராமில், "எங்கள் படமான லால் சிங் சத்தா திட்டமிட்டபடி ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படாது என்பதை அறிவித்திருக்கிறது. இதற்குக் காரணம் படத்தை சரியான நேரத்தில் முடிக்க முடியவில்லை. தற்போது, இப்படம் ஆகஸ்ட் 11, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. திரு பூஷன் குமார், டி சீரிஸ் மற்றும் ஓம் ரவுத், ஆதிபுருஷின் முழு குழுவிற்கும் எங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என தெரிவித்தனர்.
லால் சிங் சத்தாவில் அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா மற்றும் மோனா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இது டாம் ஹாங்க்ஸ் முக்கிய வேடத்தில் நடித்த 'ஃபாரெஸ்ட் கம்ப்' என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் ஆகும்.
மேலும் படிக்க:
PM-கிசான் சம்மன் நிதி திட்டம்: e-KYC ஐ எவ்வாறு புதுப்பிப்பது என்று அறிக!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 5% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க உத்தரவு
Share your comments