மத்திய அரசின் இலவச திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது. மேலும் இந்த செய்தியைப் படித்தால் நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஏப்ரல் 2020 இல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) வரும் 31 டிசம்பர் 2022 அன்றுடன் முடிவடைகிறது. அதாவது கடந்த செப்டம்பர் 28 அன்று, மோடி அமைச்சரவையால் டிசம்பர் 31 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த PMGKAY ஊட்டச்சத்து ஆதரவு திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் சுமார் 80 கோடி பேர் பயனடைந்து வந்தார்கள். இந்த திட்டத்தின் காலம் முடிந்ததும், இந்த இலவச ரேஷன் வசதி திட்டம் மூடப்படும். ஏப்ரல் 2020 முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா கைவிடப்படும்
மத்திய அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நிதி ஆயோக் (NITI Aayog) அதிகாரி ரமேஷ் சந்த், "பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளதால், இந்த திட்டம் மேலும் தொடர சாத்தியமில்லை என எதிர் பார்க்கப்படுகிறது. இலவச ரேஷன் திட்டத்துக்காக அரசு ஒதுக்கும் உணவு தானியங்களை வெளிச்சந்தையில் விற்க வேண்டும் என்றும், பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் போது PMGKAY போன்ற திட்டத்தை தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டும். மேலும் அவர், இந்தத் திட்டத்திற்காக மாதந்தோறும் ஒதுக்கப்படும் 4 மில்லியன் டன் அரிசி-கோதுமை பணவீக்கத்தைக் குறைக்கவும், ரிசர்வ் வங்கியின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படும் என்று அவர் கூறியிருந்தார்.
உணவு தானியங்களின் விலை உயரும்
உணவு தானியங்களின் பணவீக்கம் அக்டோபரில் 12.08% ஆக இருந்தது. நவம்பரில் 11.55% ஆகக் குறைந்துள்ளது. மறுபுறம், உள்நாட்டு சந்தையில் கோதுமை விலை ஏற்றம் கண்டுள்ளது. புதிய விளைச்சல் வரும் வரை விலை உயரும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தானியங்களின் தேவை அதிகரிப்பு மற்றும் கோதுமை இருப்பு குறைவதால், கோதுமை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்நாட்டு சந்தையிலேயே, ஏப்ரல் - மே மாதத்திற்கு பின், கோதுமை விலை, 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. குடோன்களில் உள்ள கோதுமை கையிருப்பு 19 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் இனி வரும் காலங்களில் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 31ம் தேதி வரை இலவச ரேஷன் நீட்டிப்பு
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 5 கிலோ இலவச ரேஷன் கிடைக்கும். அதாவது ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் சாதாரண ரேஷன் அளவை விட இருமடங்கு உணவு தானியங்களை இலவசமாக கிடைக்கும். இந்த திட்டம் ஏப்ரல் 2020 இல் முதல் கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மார்ச் 2022 முதல் ஆறு மாதங்களுக்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, தற்போது டிசம்பர் 31ம் தேதி வரை இலவச ரேஷன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments