இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. அந்தவகையில் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக Omicron தென்பட்டதில் இருந்து தினசரி பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் மட்டுமே செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (Booster Dose Vaccine)
முன் களபணியாளர்கள், 60 வயதை கடந்தவர்கள் பூஸ்டர் டோஸாக 3வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் அமைக்கப்படட்டுள்ளது.
5 டோஸ் தடுப்பூசி (5 Dose Vaccine)
இந்த நிலையில் பீகாரில் விபா குமாரி சிங் என்ற மருத்துவர் 5 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர், இதனை முற்றிலும் மறுத்துள்ளார்.
அதோடு குமாரி சிங் தான் அனுமதிக்கப்பட்ட 3 டேஸ் தடுப்பூசிகளை மட்டுமே செலுத்திக் கொண்டதாகவும், தனது அடையாள அட்டையை பயன்படுத்தி வேறொரு நபர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க கூடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments