டேட் வந்துள்ளது. இந்த புதுப்பிப்பைக் கேட்டதும், நீங்கள் வருத்தமடையலாம். அதன்படி உத்தரப் பிரதேசத்தில் நவம்பர் மாதத்திற்கான ரேஷன் விநியோகம் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் செய்யப்படும். ஆனால் பல ஊடகச் செய்திகளின்படி, மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்திய உணவுக் கழகம் இன்னும் அரிசி வழங்கவில்லை. இதனால் பல மாவட்டங்களில் ரேஷன் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அரிசி வந்தப்பின் ரேஷன் விநியோகம் மீண்டும் தொடங்கும்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான ரேஷன் ஒதுக்கீட்டு கடைகளுக்கு இந்த முறை கோதுமை, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் மற்றும் உப்பு மட்டுமே சென்றடைய முடிந்தது. இதற்கிடையில் அரிசி மட்டும் இந்த கடைகளில் சென்றடைய முடியவில்லை என்பதால் ரேஷன் பெறுவோர் இங்கு சாற்றி காத்திருக்க வேண்டும். மேலும் விரைவில் ரேஷன் கடைகளுக்கு அரிசி வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின், ரேஷன் வழங்கும் பணி வழக்கம் போல் துவங்கும். இதனிடையே விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இது போன்ற பிரச்னை முன்னதாகவும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கார்டுதாரர்கள் காத்திருக்க வேண்டியம்
உண்மையில், ரேஷன் கடைகளில் அரிசி ஒதுக்கீடு செய்யப்படாததால் பாயின்ட் ஆஃப் சேல்ஸ் மெஷின் ரேஷன் விநியோகத்தை அனுமதிக்கவில்லை. இதனால், ரேஷன் கார்டுதாரர்கள் விரும்பாவிட்டாலும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து அரிசி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்பது குறித்த தற்போது வரை தகவல் வரவில்லை. அதன்படி அரிசி வந்த பின்பு தான் ரேஷன் வினியோகம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கார்டை சமர்ப்பிப்பு: வதந்தியா? உண்மையா?
மே-ஜூன் மாதங்களில், தகுதியில்லாத ரேஷன் கார்டுதாரர்கள் யோகி அரசால் கார்டை ஒப்படைக்குமாறு அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. மேலும் ரேஷன் கார்டை ஒப்படைக்காதவர்களிடம் இருந்து அரசு மீட்கும் என்றும் கூறப்பட்டது. தற்போது இந்த செய்தி பயனாளிகள் மத்தியில் வேகமாக பரவியதுடந் மிகவும் வைரலானது, அத்துடன் பல மாவட்டங்களில் ரேஷன் கார்டை ஒப்படைக்க மக்கள் வரிசையாக அலைந்தனர். தற்போது இது தொடர்பான வெளியான செய்தியின் படி, ரேஷன் கார்டை ஒப்படைப்பது அல்லது ரத்து செய்வது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று அரசு தெளிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
Share your comments