தமிழகத்தில் தொடர்ந்து 3 மாதங்களாக பொருட்கள் வாங்காத 13 லட்சம் குடும்ப அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகளை தவிர்க்க ரேஷன் முறைகள் கணினி மயமாக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கைரேகை, மொபைல் எண்கள் பதிவு செய்வது மற்றும் குடும்ப அட்டைகளில் இடம்பெறுவர் மட்டுமே ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்து வருகிறது.
இதனால் போலி குடும்ப அட்டைகள் ஓரளவு ஒழிக்கப்பட்டது. அதன் படி, 2016-ம் ஆண்டு படி தமிழகத்தில் 2.60 கோடி அட்டைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியில் உணவுப் பொருள் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இறங்கியுள்ளது.
அதன் படி, தமிழகம் முழுவதும் இருக்கும் 13,11,716 குடும்ப அட்டைகள் தொடர்ந்து 3 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை அறிக்கையாக உணவு பொருட் நுகர்வோர் ஆணையருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் 3 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருந்திருந்தால் போலி குடும்ப அட்டைகள்? குடும்ப தலைவர் இறப்பு? வேறு மாவட்டத்திற்கு இடம்பெயர்ச்சி? போன்ற காரணங்கள் குறித்து விசாரணை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments