1. செய்திகள்

‘ஸ்ருதி 90.8’ செயலி தொடக்கம், எதற்கு இந்த செயலி?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Sruthi 90.8

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் சமுதாய சேவை அமைப்புகளில் ஒன்றான 'ஸ்ருதி 90.8' என்ற செயலி மற்றும் இணையதளம் தொடக்க விழா நடைபெற்றன.

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சமுதாய சேவை அமைப்பான ஸ்ருதி 90.8 என்ற வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலி மற்றும் இணையதளம் தொடக்க விழா கல்லூரியில் உள்ள காஞ்சி மகா சுவாமிகள் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்து வானொலி மூலம் மக்களுக்கு செய்து வரும் சேவைகளை விளக்கி பேசினார். வானொலி நிலைய மேலாளர் ஆர்.கே.பாலச் சந்தர் முன்னிலை வகித்தார்.

சமுதாய வானொலிக்கான இணையதளத்தை சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரியின் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

வானொலி நிலையத்திற்கு சிறப்பான பங்களித்த விவசாயிகள், நெசவாளர்கள், சமூக ஆர்வலர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் விருதுகளையும், சான்றிதழகளையும் வழங்கினார். நிறைவாக தமிழ்ப் பேராசிரியர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

மேலும் படிக்க:

Indian Railway: ஏப்ரல் 7 முதல் 'ராமாயண யாத்திரை' தொடங்கும்!!

விவசாய உபரணங்களுக்கு 85% மானியம் வழங்கும் அரசு!

English Summary: Shruti 90.8' app launch, why this app? Published on: 16 March 2023, 08:10 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.