உலகச் சந்தைகளில், அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தை விலை உயர்ந்ததாக ஆக்குகிறது.
இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:
இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,350 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று ரூ.200 குறைந்துள்ளது. 8 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 50,560 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று ரூ.220 குறைந்துள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களிலும் ஒரே விலையாக இருக்கிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ. 57,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.600 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை:
தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.21 குறைந்து, ரூ. 4,680 ஆகவும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,105 என சவரனுக்கு ரூ. 40,840 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.61.10க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.61,100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க
தமிழகத்தில் 282 குழந்தைகளில் H1N1 வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
Share your comments