Detect Corona by Salt Water
கோவிட் தொற்றைக் கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து பரிசோதனை செய்யும் முறையை, ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அதிகளவில் அமல்படுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை
இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்இஇஆர்ஐ) செயல்படுகிறது. இது, கோவிட் மாதிரிகளை பரிசோதிக்கும், உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறையை கண்டறிந்துள்ளது. எளிதான, வேகமான, குறைந்த கட்டணத்திலான இந்தத் தொழில்நுட்பம், நோயாளிகளுக்கு உகந்த வகையில் இருப்பதுடன் முடிவுகள் உடனடியாகவும் கிடைக்கும்.
இந்த புதிய கண்டுபிடிப்பின் செய்முறை நுண்ணறிவை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. இதனால் இந்தக் கண்டுபிடிப்பு வணிக ரீதியானதாகச மாறுவதுடன், தனியார், அரசு மற்றும் பல்வேறு ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துறைகளை உள்ளடக்கிய துறையினரிடம் உரிமம் வழங்கப்படும்.
இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், 'உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறையை, நாடுமுழுவதும், குறிப்பாக, வளங்கள் குறைந்த ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவான மற்றும் மக்களுக்கு உகந்த வகையில் பரிசோதனைகள் செய்யப்படுவதுடன் தொற்றுக்கு எதிரான நமது போராட்டமும் வலுப்பெறும் என்றார்.
மேலும் படிக்க
கோ - வின் இணையதளத்தில் அறிமுகமானது புதிய வசதி
தமிழகத்தில் ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை
Share your comments