சிவகங்கை மாவட்டத்தில் நெல் நடவுப் பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளன. நெல் விதைகளை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் என அம்மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அவ்வப்போது சிறுசிறு மழையும் பெய்து வருகிறது. இதையொட்டி வேளாண் பணிகளை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதால், அப்பகுதி விவசாயிகள் ஆரம்ப கட்ட வேளாண் பணிகளான உழவு, நெல் நாற்றுப் பாவுதல் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சிவகங்கை, சிங்கம்புனரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வேளாண் பணிக்கு தேவையான நெல் விதைகள் இருப்பில் இல்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தது மட்டுமின்றி, தேவையான அளவு விதைகளை இருப்பில் வைத்து, தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து, மணல்மேடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், தொடர்ந்து பெய்து மழையின் காரணமாக சுற்றி உள்ள கிராமங்களில் வேளாண் பணிகளை தொடங்கியுள்ளோம். இந்நிலையில், திருப்புவனத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண் பணிக்கு தேவையான நெல் விதைகள் கேட்ட போது இல்லை என சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலா்கள் தெரிவித்தனா். இதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலிலும் நெல் விதைகள், உரங்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது உழவு பணிகளை மேற்கொண்டு நெல் நாற்று பாவி வைத்தால் தான் அக்டோபா் அல்லது நவம்பா் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
மேலும், இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் உள்ளிட்ட விதைகள் மற்றும் உரங்களை இருப்பில் வைப்பது மட்டுமின்றி அவற்றை விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.
மேலும் படிக்க...
இன்று சிறு பகுதி... நாளை பெரும் பகுதி... சோலார் மின்சாரம் மூலம் வளம் பெரும் விவசாயம்!
பாரம்பரிய காய்கறி சாகுடிபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - புதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்!!
Share your comments