தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பள்ளி வாகனங்களின் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப்படும்.
அரசுப் பேருந்து பணிமனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் அதிக அளவில் ஆப்சென்ட் இருப்பதால் தான் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்வுக்கு பின்னர் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ஸ்மார்ட் கார்டு திட்டம் (Smart card scheme)
பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ-டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு 'ஜிபே', 'மொபைல் ஸ்கேனிங்' உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது, விரைவில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க
அரசு பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு!
பொறியியல் மாணவர்களுக்கு பருவத் தேர்வவை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்!
Share your comments