புதுடில்லியில், எல்லைப் பாதுகாப்பு பணியின் போது வீர மரணம் அடைந்த இந்தோ - திபெத் போலீசாரின் குடும்பங்களுக்கு, 'ஸ்மார்ட் போன்'கள் (Smart Phones) வழங்கப்பட்டன. கடந்த 1962ல் இந்தியா மீது, சீனா போர் தொடுத்தது. இதையடுத்து, 3,488 கி.மீ., எல்லையை பாதுகாக்க, இந்தோ - திபெத் போலீஸ் படை உருவாக்கப் பட்டது. இதில், 90 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர்.
ஸ்மார்ட் போன் (Smartphone)
எல்லை பாதுகாப்பு பணியின் போது ஏற்படும் மோதல்களில் பலர் வீர மரணம் அடைகின்றனர். இந்நிலையில், அவர்களின் வாரிசு அல்லது குடும்பங்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் விழா, டில்லியில் உள்ள இந்தோ - திபெத் போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில் வீர மரணம் அடைந்த வீரர்களின் வாரிசுகளுக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டது.
இது குறித்து இந்தோ - திபெத் போலீஸ் செய்தி தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக, வீர மரணம் எய்திய இந்தோ - திபெத் போலீசாரின் வாரிசுகளுக்கு, ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படுகின்றன. வீர மரணம் எய்தியோர் மனைவியர் நலச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் 75 வலு சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், ஸ்மார்ட் போன் வழங்கும் விழாவும் நேற்று நடைபெற்றது. மேலும், 75 வது இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாட மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளையும், போட்டிகளையும் நடத்தி வருகிறது.
மேலும் படிக்க
Share your comments