கனமழையால் ஏற்பட்டுள்ளப் பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
நான்கு மாதங்களில் திமுக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்டா பகுதிகளில் மழையால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விரைவில் நிவாரணம் (Relief soon
எந்த சூழலிலும் திமுக அரசு விவசாயிகளைக் கண் போல காக்கும். பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காக்க நடவடிக்கை (Action to protect)
இயன்ற அளவிற்கு பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பயிர் சேதங்களைக் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.
சேதம் தவிர்ப்பு (Damage avoidance)
4 மாதங்களில் திமுக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
நிரந்திரத் தீர்வு (Permanent solution)
சிலர் மழை வெள்ளப் பாதிப்புகளை வைத்து அரசியல் செய்கிறார்கள். 2015ல் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதைப்போல் அல்லாமல் முன்கூட்டியே உபரி நீரை வெளியேற்றினோம்.சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வை நோக்கி திமுக அரசு செயல்படுகிறது.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!
Share your comments