இந்திய ரயில்வே துறை பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயினை பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை சென்ட் ரல், எழும்பூர் உட்பட 19 ரயில் நிலையங்களை தேர்வு செய்யதுள்ளது.
இவ்வாண்டில் பெரும்பாலான ரயில் நிலையங்களை பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக (Eco Smart Station) தரம் உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளன. இந்தியாவில் அதிகப்படியான மக்கள் போக்குவரத்திற்காக ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் அனைத்து நிலையங்களையும் திறன் மிகு ரயிவே நிலையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.
தெற்கு ரயில்வேயின் கீழ் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை திறன் மிகு ரயில்வே நிலையங்களாக தரம் உயர்த்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது. சென்னை சென்ட்ரல், மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் சில பசுமை திட்டங்களை அறிமுக படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ரெயில் நிலையங்களை பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன.
சென்னை கோட்டத்தில் மட்டும் 19 ரயில் நிலையங்களை தேர்வு செய்யதுள்ளது. இதில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, மாம்பலம், கிண்டி, பழவந்தாங்கல், தாம்பரம், காட்பாடி, திருத்தணி, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்க பட்டுள்ள ரயில் நிலையங்களில் நீரை சேமிப்பதற்காகவும், சுற்று சூழலை பாதுகாக்கவும், குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேலாண்மை மையம், மழைநீர் சேமிப்பு, எல்இடி விளக்குகள் பொருத்துதல், மின்சார சேமிப்பு, பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பது, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments