1. செய்திகள்

Monsoon2020 : தீவிரமாகும் பருவமழை - அணைகள் திறப்பு - சாகுபடி பணிகள் மும்முரம்

Daisy Rose Mary
Daisy Rose Mary

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் சாரல் மழையுடன் பருவமழை தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தென்காசி, பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

கார் நெல் நாற்றுப் பணிகள் தொடக்கம்

கேரளாவைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய தமிழகத்திலும் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் வடகரை, மேக்கரை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த கன மழையால் செங்கோட்டை அருகே உள்ள 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் வடகரை, இலத்தூர் வாவாநகரம், அச்சன் புதூர், சிவராமபேட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6,500 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் பயன்பெற்று வருகிறது. தற்போது இப்பகுதிகளில் கார் நெல் சாகுபடிக்காக விதை நெல் நாற்றுப்பணிகளை விவசாயிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளனர்.

ஆழியாறு அணை திறப்பு

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணையிலிருந்து முதல் போக நெல் சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பழைய ஆயக்கட்டு பாசனத் திட்டத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த அணையின் தண்ணீர் மூலம் இரண்டு போகம் நெல், கரும்பு, மற்றும் வாழை சாகுபடி நடைபெறும். தற்போது, இதன் மூலம் சுமார் 6,400 ஏக்கர் பரப்பரவிள் முதல் போக நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது

பருவமழை தீவிரம்

இதனிடையே கர்நாடகா, ராயலசீமா, தமிழ்நாடு, வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது பருவமழையின் வட எல்லை கார்வார், ஷிமோகா, தும்கூர், சித்தூர், சென்னை வழியாக செல்கிறது.

தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கான ஆகிய மாநிலங்களின் மேலும் சில பகுதிகளிலும் சிக்கிம், ஒடிசாவின் சில பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களில் நல்ல மழை பொழிவுக்கான சூழ்நிலை நிலவுவதாக இந்திய வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்காளவிரிகுடா, அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடலில் உள்ள புயல் சுழற்சி வங்காள விரிகுடாவின் கிழங்கு மத்திய பகுதிகளில் நிலை கொண்டு இடைநிலை வளிமண்டல நிலை வரை விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவின் கிழங்கு மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும் இது மேற்கு வடக்கு முகமாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

#பருவமழை2020 : தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை

English Summary: South west monsoon, Paddy Seedling Works begins in Tenkasi Published on: 08 June 2020, 07:16 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.