இரயில் நிலையங்களில் கவுண்டர்களில் கூட்ட நெரிசலில், நீண்ட வரிசையில் நின்று டிக்கேட் பெறுவதை தவிர்த்திட தெற்கு ரெயில்வே புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதன் படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்படுகின்றன.
கொரோனா பெருந் தொற்று குறைந்து வருவதால், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள், போக்குவரத்தில் சிரமங்களை மேற்கொள்கின்றனர். நீண்ட வரிசையில் நின்று டிக்கேட் வாங்குவதால், கவுண்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே (Southern Railway) புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் க்யூ.ஆர். கோடு தொழில்நுட்ப வசதியுடன், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வே பயணிகள் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் வசதியை விரிவுப்படுத்துகிறோம். அதன்படி, க்யூ.ஆர். கோடு மூலம் ஏடிவிஎம் (தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள்) டிக்கெட், நடைமேடை கட்டணம் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். சீசன் டிக்கெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வசதி, இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்மார்ட் கார்டு, பிஎச்எம் யுபிஐ க்யூ.ஆர். கோடு, பேடிஎம் பிஎச்ஐஎம் யுபிஐ கோடு வழியாகவும் கட்டணம் செலுத்தி பயன்பெறலாம். இதற்கான முழு விளக்கத்தையும் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் திரையில் காணும் வசதியும் உள்ளது. மேலும், ரயில்வே சேவைகளைப் பற்றிய தகவல்களை பெற 139 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். க்யூ.ஆர். முறையில் டிக்கெட் பெறுவோருக்கு 0.5 சதவீதம் கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானியங்கில் இயந்திரங்களில் க்யூ ஆர் கோடு மூலம் மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதன் மூலம் பெரும் அளவில் கூட்ட நெரிசலை தவிர்க்க வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நடைமுறையை மற்ற இரயில் நிலையங்களுக்கும் உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க:
புதிய 17 பயிர் ரகங்கள், விவசாயிகள் பயன் பெற அழைப்பு! விவரம் உள்ளே
ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி எளிதில் அப்பளை செய்யவும்!
Share your comments