கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு தாமதமாகத் தொடங்குகிறது. அதன்படி, ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
இந்தியாவிற்கு அதிக மழை பொழிவைத் தரும் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி கேரளாவில் தொடங்கும். தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை பரவலாக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பொழிவு இருக்கும்.
வங்கக்கடலில் சமீபத்தில் உருவான 'யாஸ்' புயலால் காரணமாகத் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட ஒரு நாள் முன்னதாகவே அதாவது இன்றே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
தாமதமாகத் தொடங்கும் பருவமழை
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்தாண்டு 2 நாட்கள் தாமதமாக வரும் 3ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கர்நாடக கடற்கரையில் சூறாவளி சுழற்சி உள்ளதாகவும், இது தென்மேற்கு பருவமழையின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாகவும் டெல்லி வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று ஜூன் 1 முதல் மேலும் படிப்படியாக வலுவடையும், இதைத் தொடர்ந்து கேரளாவில் மழைப்பொழிவு அதிகரிக்கும். அதன்படி கேரளாவில் 3-ந்தேதி முதல் பருவமழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 சதவீதம் மழை பொழிவு
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கமான அளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மழைப் பொழிவில் 75 சதவீதம் தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கப்பெறுகிறது. சராசரியாக ஆண்டுக்கு 98 சதவீதம் மழை பெய்து வருகிறது. இது கடந்த 5 ஆண்டுகளாக 5 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மழை பொழிவு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
இன்று 13 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை மையம்!!
சூறாவளி காற்று வீசியதால் 250 ஏக்கர் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன! இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை
பொள்ளாச்சியில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ 9¼ கோடி ஒதுக்கீடு
Share your comments