கரீஃப் பருவ சாகுபடிப் பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 8.56 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது நாள் வரை மொத்தம் 1062.93 லட்சம் ஹெக்டர் பரப்பில் கரீஃப் பருவத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது .இது சென்ற ஆண்டில் 979. 15 லட்சம் ஹெக்டர் ஆகும். நாட்டில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 8.56 லட்சம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 காரணமாக எவ்விதத் தாக்கமும் ஏற்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரீஃப் பருவ விதைப்புப் பரப்பு முன்னேற்ற விவரம்
-
அரிசி: சென்ற ஆண்டு இதே காலத்தில் 338.65 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 378.32 லட்சம் ஹெக்டர் அதாவது 11.71 சதவீதம் கூடுதல்.
-
பயறு: சென்ற ஆண்டு இதே காலத்தில் 124.15 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 132.56 லட்சம் ஹெக்டர் அதாவது 6.77 சதவீதம் கூடுதல்.
-
சிறுதானியம் : சென்ற ஆண்டு இதே காலத்தில் 166.80 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 174.06 லட்சம் ஹெக்டர் அதாவது 4.35 சதவீதம் கூடுதல்
-
எண்ணெய் வித்துக்கள் : சென்ற ஆண்டு இதே காலத்தில் 167.53 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 191.14 லட்சம் ஹெக்டர் அதாவது 14.09 சதவீதம் கூடுதல்.
-
கரும்பு : சென்ற ஆண்டு இதே காலத்தில் 51.62 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 52.19 லட்சம் ஹெக்டர் அதாவது 1.10 சதவீதம் கூடுதல்.
-
பருத்தி: சென்ற ஆண்டு இதே காலத்தில் 123.54 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 127.69 லட்சம் ஹெக்டர் அதாவது 3.36 சதவீதம் கூடுதல்.
-
சணல் மற்றும் புளிச்சக்கீரை: சென்ற ஆண்டு இதே காலத்தில் 6.86 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 6.97 லட்சம் ஹெக்டர் அதாவது 1.68 சதவீதம் அதிகம்
20.08.2020 தேதி நிலவரப்படி, நாட்டில் பெறப்பட்ட மழைப் பொழிவு 663.0 மில்லி மீட்டர் ஆகும். பருவத்தின் இயல்பான மழைப் பொழிவு 628.3 மில்லி மீட்டர் ஆகும் . இது 01.06.2020 முதல் 20.08.2020 வரையான காலத்தில் 6 சதவீதம் கூடுதல் ஆகும்.
மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையின் படி, நாட்டின் 123 நீர் தேக்கங்களில் தற்போது நீர் இருப்பு நிலவரம் சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 90 சதவீதம் ஆகும்: கடந்த பத்தாண்டு சராசரியைப் போல இது 107 சதவீதம் ஆகும்.
மேலும் படிக்க...
சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..!
மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!
Share your comments