தற்போது பரவி வரும் 'டெல்டா, ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக, 'கோவாக்சின்' தடுப்பூசியின், 'பூஸ்டர் டோஸ்' மிகச் சிறப்பாக செயல்படுகிறது' என, அதை தயாரிக்கும், 'பாரத் பயோடெக்' நிறுவனம் கூறியுள்ளது.
பூஸ்டர் டோஸ் (Booster Dose)
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், கோவாக்சின் தடுப்பூசியை, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்த சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சிறப்பு முகாம் (Special Camp)
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் (Special Camp) நடத்தப்படும். ஏற்கனவே நடக்கும் சனிக்கிழமை சிறப்பு முகாம்களும் தொடர்ந்து தொடர்ந்து நடக்கும் எனக்கூறினார்.
மேலும் படிக்க
அரசு பள்ளி மாணவர்களுக்கு 100% முதல் டோஸ் தடுப்பூசி!
கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு நன்மை பயக்குமா? மருத்துவர் விளக்கம்!
Share your comments