1. செய்திகள்

ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறவிப்பு!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Smartphone

அமேசானில் கடந்த மாதம் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து முடிந்த நிலையில், தற்போது ஸ்மார்ட்போன் அப்கிரேடு சேல் என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் தசரா, தீபாவளி என தொடர்ந்து பண்டிகைகள் வந்தன. இதனை முன்னிட்டு அமேசானில் நவராத்திர ஆஃபர், தீபாவளி ஆஃபர் என வரிசையாக சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்தது. மூன்று ஆண்டுகள் இல்லாத வகையில், எக்கச்சக்கப் பொருட்களுக்கு நல்ல விலை குறைப்பு செய்யப்பட்டன.

இந்த நிலையில், அமேசானில் ஸ்மார்ட்போன் அப்கிரேடு சேல் என்ற பெயரில் மீண்டும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது ஸ்மாரட்போன்களுக்கு மட்டுமேயான ஆஃபர் ஆகும். கடந்த மாதம் ஆஃபரை தவறவிட்டவர்களுக்கு இது மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு. இம்முறை முன்னனி ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விற்பனையில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்டுகளுக்கு பலவிதமான சலுகைகள் உள்ளன.

குறிப்பாக OnePlus, Xiaomi, Samsung, iQOO, realme மற்றும் Tecno போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களில் 40% வரை சேமிக்கலாம். இந்த விற்பனை நவம்பர் 15, 2022 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Baroda அல்லது Federal Bank கார்டுகளைப் பயன்படுத்தி 10% உடனடித் தள்ளுபடியைப் பெறலாம்.

வாடிக்கையாளர்கள் ஃபெடரல் வங்கி கார்டில் குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் கிரெடிட் கார்டுகளில் 10% தள்ளுபடியைப் பெறலாம். இதேபோல், பேங்க் ஆஃப் பரோடா வங்கி மூலமாக 8,000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கினால் 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி உள்ளது என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்:
iQOO ஸ்மார்ட்போன்கள்: iQOO Neo 6 5G ஸ்மார்ட்போனானது 24,999 ரூபாய்க்கு உள்ளது, மேலும் 3, 6 மாதங்களுக்கு கட்டணமில்லா EMI சலுகையும் வழங்கப்படுகிறது. .

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்: OnePlus Nord CE 2 INR 23,499 முதல் கிடைக்கும். (INR 1,500 பேங்க் கேஷ்பேக் உட்பட), OnePlus 10R பிரைம் 29,499 ரூபாய் முதல் கிடைக்கும். (INR 3,000 பேங்க் கேஷ்பேக் உட்பட)

மேலும் படிக்க:

விவசாயிகள்: சம்பா நெல் பயிர் காப்பீடு எடுத்துட்டீங்களா

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரிய அறிவிப்பு

English Summary: Special Offers for Smartphones! Published on: 13 November 2022, 07:35 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.