
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசநத்தம் கிராமத்தில் விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை உற்பத்தியாளர் ஆக பயிற்சி நடைபெற்றது. இது வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் மற்றும் மாநில விரிவாக்கத் திட்டம் கீழ் நடைபெற்றது.
உயிர்ம வேளாண்மை (organic farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறையாகும்.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:
இந்த நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசநத்தம் கிராமத்தில் விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை உற்பத்தியாளர் ஆக பயிற்சி நடைபெற்றது. இது வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் மற்றும் மாநில விரிவாக்கத் திட்டம் கீழ் நடைபெற்றது.
இதில் விதை சான்றளிப்பு மற்றும் கரிமச் சான்றிதழ் அளிக்கும் துறையை சார்ந்த திருமதி .சித்திரைச்செல்வி மற்றும் ஈஷாவை சேர்ந்த திரு .கதிர் , மோகனூர் வேளாண் துறையில் உதவி வேளாண் இயக்குநர் திருமதி ஹேமலதா கலந்துகொண்டனர்.
இதில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முறை பற்றியும் , அதன் முக்கியதுவம் , அதற்கான சான்றிதழ் வாங்கும் முறைகளை பற்றி விளக்கினார் . இப்பயிற்சியில் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
அவர்கள் இயற்கை வேளாண்மைக்கு பயன்படும் உரங்களின் முக்கியதுவம் பற்றியம் பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்ட மற்றும் பல இயற்கை இடுபொருளின் தயாரிப்பு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார் . இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் சான்றிதழ் பெரும் முறை பற்றியும் வழிமுறைகள் குறித்தும் திருமதி .சித்திரைசெல்வி அவர்கள் விளக்கினார். மேலும் பி ஜி பி கல்லூரி மாணவிகள் மு. கனிஷ்கா , ப.காவியா, எ.காவியா, மு .சு.காவ்ய பாரதி, ஜெ.கீர்த்தனா, ச. கீர்த்தனா, ந.கிருபா, பி .கிருத்திகா,வா .கிருத்திகா, கி. கிருஷ்ணவேணி ஆகியோர் தங்களின் கருத்துகளை விவசாயிகளிடம் பகிர்த்துக்கொண்டனர்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வழிகளையும் நாட்டின் பசுமைப் பரப்பை அதிகரித்தல் , நதிகளை உயிர்ப்பித்தல், மண் வளத்தை மேம்படுத்தல் ஆகிய உயரிய நோக்கங்கள் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டார். மேலும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மாவட்டந்தோறும் ஈஷாவின் களப்பணியாளர்கள் விவசாயிகளின் நிலத்திற்கு நேரடியாக சென்று மண்ணுக்கேற்ற மரங்கள், மரங்கள் மற்றும் ஊடுபயிர்கள் குறித்து ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். இயற்கை விவசாயத்திற்கு முதலீடும் செய்யாமல் நிச்சயமான கூடுதல் வருமானத்தை விவசாயிகள் ஈட்ட வழிகாட்டினர்.
Read more:
இயற்கை வேளாண்மை, மாடி தோட்டம் குறித்த பயிற்சி : வேளாண் பல்கலை அழைப்பு!
2025 மரக்கன்றுகள்: அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பில் முன்னெடுப்பு!
Share your comments