தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது இந்த சங்கரநாராயணர் கோவில். சங்கரன் என்றால் சிவன், நாராயணன் என்பது விஷ்னுவை குறிக்கும் சொல். ஆக 'ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு' என்ற வசனத்திற்கேற்ப இந்த கோயிலில் விஷ்ணுவும் சிவனும் ஒன்றாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
கி.மு.900 ஆம் ஆண்டில் உக்கிர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது தான் இந்த கோயில். கோயில் ராஜ கோபுரம் சுமார் 125 அடிகளை கொண்டு வானுயர்ந்து காணப்படுகிறது. 9 அடுக்குகளாக ராஜகோபுரம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூன்று சன்னதிகள் இருக்கின்றனர். சிவன் சன்னதி, கோமதி அம்மன் சன்னதி மற்றும் சங்கரநாராயணன் சன்னதி.
இந்த மூன்றாவது சன்னதியில் தான் சங்கரர் மற்றும் நாராயணன் ஒரே சிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இடம். ஹரியும் சிவனும் ஒன்றுதான் என்று பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரே சிலையில் பாதி ஹரியும் பாதி சிவனும் காட்சியளிக்கின்றனர். இந்த கோயிலில் மட்டும் தான் இரண்டு கடவுள் உருவங்கள் ஒருசேர அமைந்து இருப்பதை காணமுடியும்.
இந்த சன்னதியின் பின்னால் வரைந்திருக்கும் பெருமாளின் ஓவியம் மோனலிசா ஓவியம் போல எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கடவுளின் கண்கள் நம்மை பார்ப்பது போலவே வரையப்பட்டு இருக்கும். அந்த சன்னதியை சுற்றியுள்ள மதில்களில் மூலிகை கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் இருப்பது மேலும் இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு. ஆனால் இந்த ஓவியங்கள் காலப்போக்கில் சிதிலமடைந்து இருப்பதையும் காண முடிகிறது. கோயிலில் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள மண்டபங்கள் கூடுதல் அழகை சேர்கிறது.
மேலும் படிக்க:
Share your comments