தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (2023-2024) கல்வியாண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவிற்கான ஸ்பாட் அட்மிஷன் நடைப்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளங்கலைப் பணியிடங்களை நிரப்ப 22.09.2023 அன்று ஸ்பாட் அட்மிஷன் நடைபெற உள்ளது. ஸ்பாட் அட்மிஷன் முறையானது ஆஃப்லைன் முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதியில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலை 9.00 மணிக்குள் நேரில் வர வேண்டும்.
ஸ்பாட் அட்மிஷனுக்கான நிபந்தனைகள்:
- ஸ்பாட் அட்மிஷன் இணைப்புக் கல்லூரிகளுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. அரசுக் கல்லூரிகளுக்கு அல்ல.
- ஸ்பாட் அட்மிஷனில் கல்லூரியில் காலியாக உள்ள இடத்தை தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே கவுன்சிலிங் கட்டணம் வசூலிக்கப்படும்.
- எந்த ஸ்லைடிங்கும் பின்பற்றப்படாது
ஸ்பாட் அட்மிஷனில் யார் கலந்து கொள்ளலாம்?
இதற்கு முன் கவுன்சிலிங் அல்லது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்கள் அல்லது கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள், ஆனால் இருக்கைக்கான விருப்பம் கிடைக்காதவர்கள் இதில் பங்கேற்கலாம்.
ஸ்பாட் அட்மிஷனில் யார் கலந்து கொள்ள முடியாது?
ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் அல்லது சேர்க்கை பெற்றவர்கள் அல்லது சேர்க்கையை நிறுத்தியவர்கள் அல்லது ரத்து செய்தவர்கள் இதில் பங்கேற்க இயலாது.
ஸ்பாட் அட்மிஷனுக்கான கட்டணம்:
கல்லூரிக்கான இடத்தை தேர்ந்தெடுக்கும் முன் விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஒரு இடத்தை தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங் கட்டணமாக (SC, SCA, & ST மாணவர்களுக்கு- ரூ. 1500/-), மற்றவர்கள் ரூ.3000/- செலுத்த வேண்டும்.
இணைப்புக் கல்லூரிகளுக்கான ஆண்டுக் கட்டணம்:
இணைப்புக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ. 40,000 முதல் ரூ. 50,000/- (போர்டிங் மற்றும் தங்கும் கட்டணங்கள் தவிர).
ஸ்பாட் அட்மிஷன் நாளில் பங்கேற்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை:
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் சேர்க்கை நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கல்வி மற்றும் சமூக சான்றிதழ்களின் (community certificates) சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
- ஸ்பாட் அட்மிஷன் நடைப்பெறும் இடத்தில், விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் ஊழியர்களிடமிருந்து, இணைந்த கல்லூரிகளின் தங்கும் மற்றும் இதர கட்டண அமைப்பு பற்றிய தகவல்களைப் பெறலாம்.
- வருகை குறிக்கப்பட்டு, கலந்துகொண்ட விண்ணப்பத்தாரர்களின் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படும்.
- ஆஃப்லைன் கவுன்சிலிங்கில் காலியாக உள்ள கல்லூரி இடம் திரையில் காட்டப்படும். ரேங்க் அடிப்படையில், கல்லூரி மற்றும் இருக்கை தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.
- ஸ்பாட் அட்மிஷன் பெற்ற விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட வருடாந்திரக் கட்டணத்தைச் செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம், இதற்கு பல்கலைக்கழக வளாகத்திலேயே வசதி செய்யப்படும்.
- இடஒதுக்கீடு பிரிவின் அடிப்படையிலோ அல்லது கல்லூரியிலோ அனைத்து இடங்களும் நிரம்பியதும், காத்திருப்புப் பட்டியல் உருவாக்கப்படும்.
- ஒரு வார காலத்திற்குப் பிறகும் ஏதேனும் காலியிடம் ஏற்பட்டால், காலியிடத்தை நிரப்புவதற்கு அதே வழிமுறைகள் பின்பற்றப்படும்.
இடஒதுக்கீடு பிரிவின் அடிப்படையிலான காலியிடங்கள், கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் மற்றும் டைனமிக் காலியிடங்களுக்கான கவுன்சிலிங்கின் அட்டவணை ஆகியவை 21.09.2023 அன்று http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். காலியிடங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.
மேலும் இதுத்தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/ தவல்கள் வேண்டுமாயின் விண்ணப்பதாரர்கள் 9488635077, 9486425076 அல்லது ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
NFC-யில் 206 அப்ரண்டிஸ் பணியிடங்கள்: ட்ரை பண்ணி பாருங்க பாஸ்
Share your comments