தமிழக முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் (CM Stalin) வழங்கினார்.
டெல்லியில் ஸ்டாலின்
டெல்லி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீசார் அரசு மரியாதை அளித்தனர். அதனை மு.க.ஸ்டாலின் ஏற்று கொண்டார். பின்னர் சரியாக மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்குச் சென்றார்.
பிரதமர் - முதல்வர் சந்திப்பு
தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி (Vaccine) வழங்க வலியுறுத்தினார். நீட் தேர்விலிருந்து விலக்கு, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, கொரோனா பேரிடர் நிதி, நிலுவை ஜி.எஸ்.டி தொகை குறித்து பிரதமரிடம் முதல்- அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு 25 நிமிடங்கள் வரை நடைபெற்றது.
கோரிக்கை
பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு, பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதல்-அமைச்சரான பிறகு முதல் முறையாக டெல்லி வந்து இருக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி அளித்து இருக்கிறார்.செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. திருக்குறளை தேசிய நூலாக (National Book) அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
நாடாளுமன்றம்,சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். புதிய மின்சார சட்ட்த்தை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளேன். இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என முதல்வர் கூறினார்.
மேலும் படிக்க
ரூ. 61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
Share your comments