State Government: Discount up to Rs 10 lakh for electric car buyers
இந்திய அரசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. மக்களும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கார்களின் விலையேற்றம் காரணமாக எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு அரசு சார்பில் பல்வேறு வரிச்சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் 80EEB பிரிவின் கீழ் மொத்த வரி விலக்குடன் ரூ.1,50,000/- வரை எலெக்ட்ரிக் வாகனக் கடன்கள் கிடைக்கின்றன.
இந்த சட்டத்தின் கீழ் தனி நபர்களுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு இந்த வரிவிலக்கு உண்டு. இதேபோல் பல்வேறு மாநிலங்களும் மானியங்களுடன் கூடிய ஊக்கத்தொகை அளித்து வருகின்றன. தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ள ஹரியானா அரசு மாநிலத்திற்கான மின்சார வாகன (EV) கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் கொள்கையின்படி, மின்சார வாகன உற்பத்தியாளர்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு தங்கள் SGSTயில் 50% திரும்ப பெற முடியும். கூடுதலாக, உற்பத்தியாளர்கள் மாநிலங்களுக்கு இடையேயான மின்சார வாகனங்களை அகற்றும் தொழிற்சாலை அல்லது வசதியை நிறுவ ரூ.1 கோடி வரை ஊக்கத்தொகையைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களுக்கு மட்டுமின்றி மின்சார கார்களை வாங்குவோருக்கும் ஹரியானா அரசு தள்ளுபடியை அறிவித்துள்ளது. புதிய கொள்கையின் படி, ஹரியானாவின் மக்கள் ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையில் விலையுள்ள மின்சார கார்களுக்கு 15 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். இதன் மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு அதிகப்பட்சமாக ₹6 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் காரணமாக, ஹோண்டா சிட்டியின் ஹைப்ரிட் மாடல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
LPG Update: சிலிண்டர் விலை 459 ஆக உயர்ந்துள்ளது, இப்போ விலை என்ன தெரியுமா?
Share your comments