பிரதமர் கிசான் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசின் 6-வது தவணை கிடைக்கவில்லை என்றால் உங்களின் ஆவணங்களில் பிழை இருக்க வாய்ப்பு உள்ளது பின் வரும் வழிமுறைகளைப் பின்பற்றி அதனை தெரிந்துகொள்ளலாம்.
PM-Kisan திட்டம்
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் (PM-Kisan) அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு மூன்று தவணையாக இந்த பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
இதற்கான 6-வது தவணையை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது. இதன் மூலம் 8.5 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் மத்திய அரசு ரூ.2000 வீதம் செலுத்தியுள்ளது.
உங்கள் கணக்கில் பணம் வரவில்லையா?
ஏற்கனவே பதிவு பெற்றுப் பயனடைந்த விவசாயிகளுக்கு இந்த தவணை வரவில்லை என்றால் உங்களின் ஆவணங்களில் மேற்கொண்ட திருத்தம் அல்லது தவறு காரணமாகத் தவணை கிடைக்காமல் போய் இருக்கலாம். இதற்கு உங்களின் கணக்கு நிலை குறித்து அறிய வேண்டும்.
உங்கள் கணக்கு நிலை அறிய என்ன செய்ய வேண்டும்?
பி.எம் கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உங்களின் தவணை தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள முடியும். இதற்குக் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
-
உங்களின் கணக்கு நிலை குறித்து அறிய முதலில் www.pmkisan.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்
-
முகப்புப்பக்கத்தில் "Farmers Corner"-ல் ''Beneficiary status" என்பதைக் கிளிக் செய்க.
-
பின் உங்களின் ஆதார் எண் / கணக்கு எண் / மொபைல் எண் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும்
-
பிறகு "Get Date" என்பதை கிளிக் செய்க
-
இப்போது உங்களின் கணக்கு நிலவரங்களை பார்க்கமுடியும்.
உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் அதற்கான விவரங்களை கணக்கு நிலையில் வழங்கப்பட்டு இருக்கும். அந்த விவரங்களுடன் உங்கள் பகுதி வேளாண் அதிகாரிகளை அணுகினால் உங்களுக்கு பணம் கிடைப்பதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்
மேலும் படிக்க
PM Kisan : உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துவிட்டதா இல்லையா?தகவல் இங்கே!!
விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!
Share your comments