பீகார் மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அரசியல் பாட பிரிவில் 100க்கு 151 மார்க்குகள் எடுத்துள்ளார். இதற்கு அச்சுபிழையேக் காரணம் என பல்கலைக்கழகம், தெரிவித்து உள்ளது.
தேர்வுகள் முடிவுகள்
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ளது லலித்நாராயண் மிதிலா பல்கலைக்கழகம். இந்த பல்கலைகழகத்தில் ஹானர்ஸ் இளங்கலை பிரிவு மாணவர் ஒருவர் அரசியல் பாட தேர்வை எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அந்த மாணவர் பெற்ற மதிப்பெண்ணைப் பார்த்து அந்த மாணவர் மட்டுமல்லாமல், சக மாணவர்களும், மற்றவர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.
151 மதிப்பெண்கள்
காரணம் என்னவென்றால், தேர்வு எழுதியது 100 மதிப்பண்களுக்கு. வந்திருப்தோ, 151 மதிப்பெண்கள். இதைப்பார்த்தால், வியப்பு ஏற்படுவது இயற்கைதானே.இந்த மதிப்பெண் வித்தியாசம் குறித்து மாணவர் கூறுகையில் இவை தற்காலிக மதிப்பெண் பட்டியல் என்ற போதிலும் கடைசி நேரத்திலாவது அதிகாரிகள் மதிப்பெண் பட்டியலை சரி செய்து இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்பட்டார்.
இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பி.காம் மாணவர் ஒருவர் கணக்கு மற்றும் நிதிதாள் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் அடுத்த கட்ட தரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளார். இதை கண்டுபிடித்த மாணவர் தவறை சுட்டிக்காட்டியதை அடுத்து அவருக்கு சரியான மதிப்பெண் பட்டியலை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கி உள்ளது.
பொதுவாக விடைத்தாளைத்திருத்தும் ஆசிரியர்கள் சில மதிப்பெண்களை குறைத்தோ அல்லது கூட்டியோ போட்டுப் பிழை செய்வது வழக்கம். ஆனால் இந்தப் பிழை பெரும் பிழையாக மாறிவிட்டது. விசாரணை நடத்தி பல்கலைக்கழகம், அச்சுப்பிழையே இந்தத் தவறுக்கு காரணம் என விளக்கம் அளித்துள்ளது.
மேலும் படிக்க...
ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!
கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!
Share your comments