பிளஸ் 2 தேர்வுகளை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி, 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கடந்த ஆண்டு எந்த மாநிலத்திலும் ஜூன், ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பல மாநிலங்களில் செப்டம்பரிலும், சில மாநிலங்களில் அக்டோபரிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மூன்றாவது அலை பரவல் காரணமாக டிசம்பர் இறுதியிலிருந்து கடந்த மாதம் இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டன.
பிளஸ்2 பொதுத் தேர்வு (Plus 2 Public Exam)
பிப்ரவரி மாத துவக்கத்தில் தான் பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பிளஸ்2 பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன; சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த தேர்வை மாணவ - மாணவியர் பள்ளிக்கு நேரிடையாக வந்து எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு (Online Exam)
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த, மாநில பாடத் திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ., வாரியங்களில் படிக்கும் மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவலால் பள்ளிகள் பல மாதங்கள் திறக்கப்படவில்லை. திறந்த போதும் தொற்று பயத்தால், மாணவர்கள்பலர் பள்ளிக்கு வரவில்லை. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து எழுத வேண்டும் என அறிவித்திருப்பது, அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது. உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவத் துவங்கிஉள்ளது. பள்ளிகளுக்கு நேரிடையாக வந்து மாணவர்கள் தேர்வு எழுதினால் தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுக்கும்.
அதனால் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க
WHO எச்சரிக்கை: புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு!
வெகுவாக குறைகிறது கொரோனா: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தகவல்!
Share your comments