விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை மானியக் கடன்!
பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகளான விவசாயிகளுக்கு புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.3 லட்சம் வரை, மானியக் கடன் வழங்கப்படும். பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 12வது தவணைக்காக கோடிக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசு மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்துள்ளது. கிசான் கிரெடிட் கார்டு மூலம் இந்த கடன் வசதியைப் பெறலாம். இதன் மூலம், விவசாயிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு 3 லட்சம் வரை குறுகிய கால கடன் வழங்கப்படுகிறது. கிசான் கிரெடிட் கார்டில் எடுக்கப்பட்ட கடனுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இதன் காரணமாக, கிசான் கிரெடிட் கார்டில் வாங்கிய கடனுக்கு குறைந்த வட்டியே நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
2.மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்- உயருகிறது HRA!
அண்மையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) மோடி தலைமையிலான அரசு உயர்த்தியது. அதனுடன் இப்போது மற்றொரு உதவித்தொகையை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும். DA உயர்வுடன் HRA (வீட்டு வாடகை சலுகை) உயர்வும் அறிவிக்கப்படலாம். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த மாதம் முதல் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். இதனுடன், HRA உயர்வும் விரைவில் அறிவிக்கப்படலாம்.
3.SSC: பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் குறித்து பயிற்சி முகாம்
தமிழ்நாடு அரசின் சார்பில் SSC தேர்வுகளுக்கான பயிற்றுநர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம், இணைய வழியிலும், அரசு கேபிள் டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேரடியாக வர விரும்பும் மக்களுக்கு அனுமதி இலவசம் என்பதும் குறிப்பிடதக்கது. முகாம் 9 அக்டோபர் 2022 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னையில் நடைபெறும்.
4. வடகிழக்குப் பருவ மழை: 17 மாவட்டங்களில் சராசரியை விட அதிகரிக்க வாய்ப்பு வேளாண்மைப் பல்கலை, கணிப்பு
வடகிழக்குப் பருவமழை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவ மழை மூலம் மழைப்பொழிவு கிடைக்கிறது. வடகிழக்குப் பருவ மழை குறித்த முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் பயிர் மேலாண்மை இயக்கத் திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 17 மாவட்டங்களில் சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. ஆர்கானிக் உள்ளீடுகள் மற்றும் மூலிகை சார்ந்த தயாரிப்புகள் குறித்த பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் (NOFRC) மூலம் இயற்கை இடுபொருட்கள் மற்றும் மூலிகை சார்ந்த பொருட்கள் குறித்த பயிற்சி 7. அக்டோபர் .2022 அன்று நடப்பெறவுள்ளது. ஆர்கானிக் உள்ளீடுகள் தயாரிப்புகள், மூலிகை சார்ந்த பொருட்கள் மூலம் கரிம பூச்சிகள் மற்றும் நோய் மேலாண்மை கற்பிக்கப்படும். இப்பயிற்சிக்கு கட்டணமாக ரூ.590 பெறப்படுகிறது. காலை 9:30 முதல் மதியம் 1 மணிவரையும் மற்றும் 2 மணி முதல் மாலை 5 மணிவரையும் இப்பயிற்சி நடைபெறும்.
மேலும் படிக்க:
சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை, மேலும் இம்மாவட்டங்களிலும்...
NMMS உதவித்தொகை: மாணவர்களுக்கு ₹12,000 உதவித்தொகை, விண்ணப்பிக்க அறிவிப்பு!
Share your comments