நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு டிரோன் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்க மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, நவீன காலத்திற்கு ஏற்றார் போல், விவசாயம் மாறி வருகின்றது. மேலும், விவசாய பணிகளுக்கு ஆட்கள் குறைவாக கிடைத்து வருகின்றனர். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான யுக்திகளை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் டிரோன் மூலம் உரம் மற்றும் மருந்து தெளித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
விவசாயிகள் நவீன வேளாண்மை சாகுபடிக்கு உரம், மருந்து, பூச்சிக்கொல்லிகளுக்கும், களை எடுக்கவும் டிரோன்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்நிலையில் நவீன கால வேளண்மையிலும் டிரோன் முக்கிய அங்கம் பிடித்துள்ளது.
விவசாயத்தில் டிரோன்கள் முக்கிய இடத்தையும் பிடிக்கும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. வரும் காலத்தில் ஆட்கள் பற்றாக்குறையை போக்க டிரோன் தான் முக்கிய காரணியாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும், டிரோன்களை இயக்க பல்வேறு பயிற்சியும் வோளண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அளிக்கப்படுகிறது. சில சமயங்களில் டிரோன்கள் வேளாண்மை பயன்பாட்டிற்காக வாங்கும் போது, மானியமும் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வேளாண்மை அலுவலர்கள் டிரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது.
மேலும் படிக்க:
Share your comments