மீன் வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த மீன்வளத்துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மீனவர்கள் பண்ணை அமைத்து மீன் வளர்க்கும் போது, அதிக தண்ணீர் விரயமாவதைத் தடுக்கும் வகையில், விரயமாகும் தண்ணீரை, விவசாயத்துக்குப் பயன்படுத்த வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன் படி, தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தென்னந்தோப்புகளில் மீன் குட்டை அமைத்து விவசாயம் மேற்கொள்ள மீன்வளத்துறை 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தென்னந்தோப்புகளில் உள்ள குட்டைகளில் மீன் வளர்ப்பு மேற்கொள்ள நடப்பாண்டு ரூ.14.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , விவசாயத்துடன் இணைந்து மீன் வளர்ப்பினை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக வருவாய் ஈட்ட இயலும்.
50 சதவீதம் மானியம்
1000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குட்டைகளில் மீன் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக மீன் குஞ்சுகள் மீன் தீவனங்கள் மற்றும் அறுவடை செலவினம் ஆகியவை உள்ளிட்ட செலவினத்திற்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக 25000 வரை மானியம் வழங்கப்படும்.புதிதாக தென்னந்தோப்பில் மீன் வளப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்களும் இதில் பயன்பெறலாம்.
விரும்பமுள்ளவர்கள் உடன் நல்லதங்காள் ஓடைஅணை, கோனேரிப்பட்டி, தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வள ஆய்வாளரை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் அவலத்தையும் அணுகி விவரங்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..!
மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!
Share your comments