1. செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பி ஏவுகணையின் சோதனை வெற்றி

R. Balakrishnan
R. Balakrishnan
Agni Prime
Credit : Dinamalar

கண்டம் விட்டு கண்டம் பாயும் 'அக்னி பி' (Agni B) ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

அக்னி பிரைம்

ஒடிசா கடற்கரையில் அணுசக்தி திறன் கொண்ட அக்னி-பிரைம் (Agni Prime) ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய தலைமுறை அக்னி பி ஏவுகணை, ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து இன்று (ஜூன் 28, 2021) காலை 10:55 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலை தூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் (Radar) நிலையங்களின் மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து இந்த ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை அடைந்தது.

அக்னி ரக ஏவுகணைகளில் புதிய தலைமுறை மேம்பட்ட வகையாக அக்னி பி ஏவுகணை விளங்குகிறது. 1000 முதல் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறனை இந்த ஏவுகணை பெற்றுள்ளது.

மேலும் படிக்க

கார் சாகுபடிக்கு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகள் - 50% மானியத்தில் வழங்கப்படுகிறது!

English Summary: Success of Agni B intercontinental ballistic missile test Published on: 28 June 2021, 07:42 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.