ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள 286 குடோன்களிலிருந்து கொண்டு செல்லப்படும் அரிசி மூடைகளுக்கு குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் எனவும் மதுரை விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்தார்.
சென்னையில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் சேமிப்பு கிடங்குகளில் மழையால் அரிசி மூட்டைகள் சேதம் அடைவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அற்கு, தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகளை மழையால் சேதம் அடையாமல் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்வதாகவும் இதுதொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அற்கு, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடமும் அரிசி கடத்தல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை செய்யப்பட்டு அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கூடுதலாக இரண்டு டிஜிபிக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 286 குடோன்களில் இருந்து கொண்டு செல்லப்படும் அரிசி மூடைகள் எந்த குடோனில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது என்பது தெரியாததால் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை என்று கூறிய அமைச்சர், இதனை தடுக்கும் விதமாக 286 குடோன்களில் இருந்து செல்லக்கூடிய அரிசி மூட்டைகளில் புதிதாக குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி கடத்தலை தடுக்க முடியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னனு பதிவேட்டில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுகிறது இதற்கு மாற்று ஏற்பாடு ஏதும் உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பயி கேள்விக்கு, மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments