1. செய்திகள்

தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகள்- துரித நடவடிக்கை எடுத்த வனத்துறை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
sufficient water resources, the wildlife population in increasing Khagaznagar division

வறண்ட காலநிலைகளில் வனவிலங்குகளைப் பாதுகாக்க வனத்துறையினர் இயற்கை நீர்நிலைகள் மற்றும் நீர்த்தொட்டிகளில் சோலார் பம்புகளைப் பயன்படுத்தி தண்ணீரை நிரப்பி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆந்திராவின் வனப்பகுதியினுள் போதிய நீர் ஆதாரங்கள் உள்ளதால், காகஸ்நகர் கோட்டத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குமரம்பீம் ஆசிபாபாத் மாவட்ட வனமானது 6.04 லட்சம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் இரண்டு வனப் பிரிவுகளைக் கொண்டுள்ளது: ஆசிபாபாத் மற்றும் காகஸ்நகர் 11 ரேஞ்சஸ், 79 பிரிவுகள், 245 பீட்ஸ்கள், 846 கம்பார்ட்மெண்ட்ஸ்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியிலுள்ள காடானது பல்வேறு வகையான பறவைகள் மற்றும் வன விலங்குகளின் இருப்பிடமாக உள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே இந்தியா முழுவதும் பரவலாக வெப்பநிலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்திய வானிலைத்துறையும் வரும் மே மாதங்களில் இயல்பை விட அதிகளவில் வெப்பம் இருக்கும் எனவும், வட மாநிலங்களின் ஒரு சில பகுதிகளிலும் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனையொட்டி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் வெப்பத்தினால் ஏற்படும் உடல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளன. முன்பை விட பெருமளவில் மின்தேவையும் அதிகரித்துள்ள நிலையில் மின் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

மனிதர்கள் போன்றே காடுகளில் வாழும் வன உயிரினங்களும் அதிகப்படியான வெப்பநிலையால் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. காடுகளிலிருந்து மான்கள் மற்றும் பிற விலங்குகள் குடிநீரைத் தேடி அருகிலுள்ள கிராமங்களுக்கு அடிக்கடி நுழைகின்றன.

சமீபத்தில், காகஸ்நகர் மண்டலத்தில் ஒரு மான் காணப்பட்டது. குடிநீர் தேடி வந்த மானை அங்குள்ள தெரு நாய்கள் துரத்தி கடித்ததால் காயமடைந்தன.  அதன்பின்னர், வனத்துறையினர் மானை மீட்டு, பாதுகாப்பான வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாவர உண்ணிகளுக்கு போதுமான தீவனம் இருப்பதை உறுதி செய்வதற்காக, கோடை காலத்தில் வனப்பகுதியில் புல்வெளிகள் வளர்க்கப்படுகின்றன. மேலும், காய்ந்த இலைகளை சுத்தம் செய்யவும், காட்டுத் தீயை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து பேஞ்சல்பேட்டை வனச்சரக அலுவலர் எஸ்.வேணுகோபால் கூறுகையில், 'சோலார் பம்புகள் மூலம் சாசர் பள்ளங்கள் மற்றும் இயற்கை நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகின்றன. வனத் தீயை தடுக்கும் வகையில் காய்ந்த இலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், புல்வெளிகளில் புல் வளர்க்கப்பட்டு, தாவர வகை விலங்குகளுக்கு தீவனம் அளிக்கப்படுகிறது.

தண்ணீரைத் தேடி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திலிருந்து பிரணஹிதா நதியைக் கடந்து இப்பகுதியில் புலிகள் குடியேறுவதால், தற்போது காகஸ்நகர் பிரிவில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

தண்ணீர் பாய்ச்சுற கவலை இனி வேண்டாம்.. கல்லூரி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு

தம்மாத்துண்டு இஞ்சி.. உடம்புக்குள்ள இவ்வளவு பண்ணுதா?

English Summary: sufficient water resources, the wildlife population in increasing Khagaznagar division Published on: 19 March 2023, 03:34 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.