கோடைக்காலம் தொடங்கவிருப்பதை முன்னிட்டு கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியப் பகுதிகளில் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு தீவனப் பயிர்களை சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் ஏளாளமானோர் விசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகள் நிறைந்த பகுதியாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதிகளில் தென்னை, வாழை, நெல் உள்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பால் விற்பனை செய்யவும், உரம் தயாரிக்கவும் பலரும் கால்நடைகளை நம்பியே உள்ளனர்.
பொதுவாக கால்நடைகளுக்கு சோளத்தட்டு, நிலக்கடலை கொடி, வைக்கோல் உள்ளிட்டவை பிரதான உலர் தீவனமாக வழங்குகின்றனர். மழைக்காலத்தை பயன்படுத்தி, பலரும் சோளம், நிலக்கடலையை மானாவாரி பயிராக சாகுபடி செய்து, கோடை காலத்தை சமாளிக்க உலர் தீவனத்தை சேமித்து வைப்பது வழக்கம். கோடைக் காலங்களில் கால்நடைகளுக்கு உலர் தீவனம் மற்றும் பசுந்தாள் தீவனம் வழங்கி வருகின்றனர்.
தீவன தட்டுப்பாடு குறையும்
இந்நிலையில், ஆனைமலை ஒன்றிய விவசாயிகள், கடந்த சில மாதங்களில் பெய்த மழையை பயன்படுத்தி, சோளம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, அறுவடைப்பருவத்தை எட்டியுள்ளதால், அப்பகுதி முழுவதிலும் சோளம் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில், அறுவடை செய்த சோளத்தை குச்சு ஊன்றி உலரவைத்தும் காயவைத்தும் வருகின்றனர்.
அதேபோல், நெல் அறுவடை முடிந்த பகுதிகளிலும், வைக்கோல்களும் உருளை உருளையாக கட்டி சேமித்து வருகின்றனர். நடப்பாண்டு போதிய அளவு மழை பெய்ததால், தீவன பயிர்கள் சாகுபடி அதிகரித்துள்ளது. வரும் கோடை காலத்தில், தீவனத்தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கால்நடை மருத்துவ முகாம்
இதனிடையே, தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த பசுவாபுரம் பகுதியில் கோழி, ஆடு மற்றும் மாடுகளுக்கு, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், சினை நிற்காத கால்நடைகளுக்கு மலட்டு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை, குடற்புழு நீக்க மருந்து, மாடுகளுக்கான சினை ஊசி, உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டது. ராமியணஹள்ளி கால்நடை உதவி மருத்துவ அலுவலர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் இந்த முகாமில் பங்கேற்றனர்.
இந்த செய்திகளை படிக்க தவறவிடாதீர்கள்...
விவசாயத்துறையில் அதிமுக அரசின் சாதனைகள்!
பயறு வகை பயிர்களில் தரமான விதை உற்பத்திக்கான தொழில் பயிற்சி
ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments