மத்திய அரசின் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திர திட்டத்தில் சேரலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்டை முதுநிலை கண்காணிப்பாளர் வாஜி கணேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசு பெண்களுக்கான மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் என்ற புதிய திட்டத்தை அஞ்சலகங்களில் அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தில் பெண்கள் அல்லது சிறுமிகள் 2025 மார்ச் 31ஆம் தேதி வரை சேமிப்பு கணக்கு தொடங்கலாம்.இதற்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் குறைந்தது ரூபாய் ஆயிரம் முதல் ரூபாய் இரண்டு லட்சம் வரை வைப்புத் தொகை செலுத்தலாம்.இரண்டு ஆண்டுகள் 7.5% நிலையான வட்டி காலாண்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது.
ஒருவர் இத்திட்டத்தில் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் நூறின் மடங்குகளாக தொடங்கலாம். ஏற்கனவே உள்ள கணக்கிற்கும் மற்றொரு கணக்கிற்கும் மூன்று மாத கால இடைவெளி இருக்க வேண்டும்.தொடங்கிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சி அடைகின்றது. கணக்கு வைத்துள்ளவர் மரணம் அடைந்தால் 7.5சதவீதம் அசல் தொகைக்கான வட்டி செலுத்தப்படும்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கணக்கை முன்கூட்டியே முடிக்க அனுமதிக்கப்படும்.அந்த கணக்குகளுக்கு 5.5% வட்டி வழங்கப்படும். இத்திட்டத்தில் அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களில் தொடங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments