1. செய்திகள்

சூப்பர் அப்டேட்- 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்

T. Vigneshwaran
T. Vigneshwaran

Super update

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அதில் பேசிய அவர், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் பொதுமக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

அதுமட்டுமின்றி தற்போது குஜராத்தில் ரூ.1060க்கு விற்கப்படும் சிலிண்டர்கள் ரூ.500க்கு விற்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கூறினார்.

குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், வருகிற ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க:

மீண்டும் தக்காளியின் விலை ரூ. 40ஆக உயர்ந்துள்ளது,

மாதம் ரூ.1,38,500 சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி வேலை

English Summary: Super update- 300 units free electricity, gas cylinder for Rs.500

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.