இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சீரான வளர்ச்சியை எட்டி இருக்கிறது. EV-க்களின் சில்லறை விற்பனை 2021-ஆம் நிதியாண்டில் 134,821 யூனிட்களாக மட்டுமே இருந்த நிலையில், 2022-ஆம் நிதியாண்டில் 429,217 யூனிட்டுகளாக இருப்பதே இதற்கு சாட்சி.மத்திய மற்றும் மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவித்து வரும் நிலையில், Born Electric வாகனங்களை அடுத்த 2 - 3 ஆண்டுக்களில் அறிமுகப்படுத்த உற்பத்தியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். நீங்கள் புதிதாக எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டு வந்தால் ரூ.25 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த கார்களின் பட்டியலை இங்கே பாருங்கள்
மஹிந்திரா எக்ஸ்யுவி400 (Mahindra XUV400)
மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி வாகனமான மஹிந்திரா400 காரின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 456 கிமீ ரேஞ்சை கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
டாடா நெக்ஸான் EV (Tata Nexon EV)
டாடா-வின் Nexon EV காரானது ரூ.14.99 லட்சம் என்ற துவக்க விலையில் இருந்து அதிகபட்சம் ரூ.17.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது மற்றும் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை செல்லும். அதே போல ரூ.18.34 லட்சம் முதல் ரூ.19.84 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் Nexon EV Max கார் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 437 கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
டாடா டிகோர் EV (Tata Tigor EV)
டாடா நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான எலெக்ட்ரிக் காரான Tigor EV ரூ.12.49 லட்சம் முதல் ரூ.13.64 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 306 கிமீ தூரம் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric)
ஹூண்டாய் நிறுவனத்தின் Kona Electric காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.23.84 லட்சம் முதல் ரூ.24.03 லட்சமாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ வரை மைலேஜ் தரும் என நிறுவனம் கூறுகிறது.
மேலும் படிக்க:
Share your comments