அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவான் சென்றதை அடுத்து, சீனா போர் விமானங்களை நிலைநிறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தை 20க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் கடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தைவான் தனது சொந்த படைகளுக்கு போர் எச்சரிக்கையுடன் இருக்க அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. எல்லையில் உள்ள பிராந்தியத்தில் நான்கு போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியதன் மூலம் அமெரிக்கா எதிர் தாக்குதலையும் சமிக்ஞை செய்துள்ளது.
உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் (Hua Chunying) ட்வீட் செய்துள்ளார். 1.4 பில்லியன் சீன குடிமக்களை அமெரிக்கா எதிரிகளாக்கியுள்ளது. சீனாவுக்கு சவால் விடும் அமெரிக்காவின், இந்த நடவடிக்கை நல்ல முடிவுக்கு வராது என சீன செய்தி தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
தைவானில் அமெரிக்கப் பிரதிநிதி வருகையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது சீனாவின் நிலைப்பாடு ஆகும். செவ்வாய்கிழமை இரவு தைவானில் தரையிறங்கிய பெலோசி, புதன்கிழமை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கால் நுற்றாண்டில் மூத்த அமெரிக்கத் தலைவர் ஒருவர் தைவான் செல்வது, இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க சபாநாயகரின் தைவான் பயணம் நாட்டின் சுதந்திரத்தை வலுப்படுத்தும் என்று சீனா நம்புகிறது. USS Ronald Reagan, USS Antietam, USS Higgins மற்றும் USS ஆகிய கப்பல்கள் தைவான் எல்லைக்கு அருகில் தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு எதிராக சீன கப்பல்களும் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெலோசியின் தைவான் பயணம் நெருப்புடன் விளையாடுவதாகவும், சும்மா நிற்கப் போவதில்லை என்றும் சீனா மிரட்டியுள்ளது. இதற்கிடையில், தைவான் எல்லையில் அமைந்துள்ள சீனாவின் ஜியோமென் நகரில் கவச வாகனங்கள் நகர்வதற்கான அறிகுறிகள் உள்ளன.
மேலும் படிக்க:
Flag Code Of India: சொல்வது என்ன? அறிந்திடுங்கள்!
அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி: புதுவித தீர்வுடன் விற்பனையாளர்கள்!
Share your comments