தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக உக்ரைன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உக்ரைன் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU)கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் உக்ரைன் தேசிய உயிர் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் பி.காசுக் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் ப.ஸ்ரீதர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னணியை எடுத்துரைத்தனர்.
உக்ரைன் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் நிக்கோலன்கோ மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நீ.குமார் ஆகியோர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி நடைபெற வேண்டிய ஆராய்ச்சிப்பணிகளைப் பட்டியலிட்டனர்.
இதன் மூலம் இவ்விரு பல்கலைக்கழகத்தினரும், தங்களுக்குத் தேவையான ஆராய்ச்சித் தொடர்பான விபரங்களைப் பரிமாறிக்கொள்வர்.
மேலும் படிக்க....
பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - புதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்!!
Share your comments