பார்த்தீனியம் அழிப்பு வாரத்தையொட்டி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் செடிகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பார்த்தீனியம் ஒரு நச்சுக்களை. இக்களைச் செடியானது,உலகம் முழுவதுமாக பரவி
பலவிதமான தீமைகளை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுத்துவதுடன், வேளாண்மை சாகுபடிக்கும் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது.
இதனை அழித்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும், உழவியல் துறையில் களை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும், ஆகஸ்ட் 16 முதல் 22 - ம் தேதிவரை, பார்த்தீனியம் அழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பார்த்தீனியத்தின் தீமைகள் குறித்து, மாணவர்கள், விவசாயிகள், பண்ணைப்பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, பல்கலைக்கழக வளாகத்தின் வயல்வெளிகளில், துணை வேந்தர் முனைவர். குமார், விஞ்ஞானிகள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்களுடன் இணைந்து பார்த்தீனியச் செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார்.
மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் பார்த்தீனியம் செடிகளைக் கண்டறிந்து அழிப்பதற்காக, பண்ணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக் கவசங்களையும் துணைவேந்தர் வழங்கினார்.
இதன்மூலம் இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகமானது பார்த்தீனியம் இல்லா வளாகமாக மாற உள்ளது.
மேலும் படிக்க...
இலவச மாட்டுக்கொட்டை அமைக்கும் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பஞ்சகவ்யா விற்பனைக்கு! விவசாயிகள் கவனத்திற்கு!
Share your comments