1. செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2020

KJ Staff
KJ Staff
Agriculture Couseling

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2020-இன் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate verification) பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்த முதல்கட்ட கலந்தாய்வு (Counseling) இன்று முதல் 12.12.2020 வரை 6 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் முனைவர் மா. கல்யாண சுந்தரம் (M. Kalyana Sundaram) அவர்கள் தெரிவித்துள்ளார்.

இளமறிவியல் வேளாண்மை பிரிவு:

தமிழக அரசின் கொரோனா தொற்று (Corona) பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தினமும் 600 மாணவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு உண்டான சேர்க்கை ஆணை (Admission Order) வழங்கப்படும். இன்று, பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் அவர்கள் இளமறிவியல் வேளாண்மையில் (Young Science Agriculture) முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் மற்ற பாடப்பிரிவுகளில் முதல் இடத்தைப் பெற்ற மாணவர்களுக்கும் சேர்க்க ஆணைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில், பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் அ.சு. கிருட்டினமூர்த்தி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Agriculture Counseling

சேர்க்கை ஆணை பெற்ற மாணவரகளின் பட்டியல்:

  1. செல்வன் T.V. கிரிவாசன்
    பாடப்பிரிவு: இளமறிவியல் (மேதமை) வேளாண்மை
    கல்லூரி: தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு நிறுவனம், பெரம்பலூர்
    தரவரிசை: 2
  2. செல்வி R. ஸ்வாதி
    பாடப்பிரிவு: இளமறிவியல் (மேதமை) வேளாண்மை
    கல்லூரி: வேளாண்மை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
    தரவரிசை: 7
  3. செல்வி A. தர்ஷினி
    பாடப்பிரிவு: இளமறிவியல் (மேதமை) வேளாண்மை
    கல்லூரி: வேளாண்மை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
    தரவரிசை: 8
  4. செல்வி S. ரிதன்யா
    பாடப்பிரிவு: இளம் தொழில்நுட்பம் (உயிர்த் தொழிநுட்பம்)
    கல்லூரி: வேளாண்மை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
    தரவரிசை: 14
  5. செல்வன் A. பூவரசு
    பாடப்பிரிவு: இளமறிவியல் (மேதமை) வனவியல்
    கல்லூரி: வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்
    தரவரிசை: 197
  6. செல்வி M. ஸ்நேகா
    பாடப்பிரிவு: இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை
    கல்லூரி: தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்
    தரவரிசை: 239

பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு:

முன்னதாக பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வுக்கு 1392 மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, 746 மாணவர்களுக்கு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் (Tamil Nadu Agricultural University) வழங்கப்படும் அனைத்து வேளாண்மை பாடப்பிரிவுகளிலும், மாணவர்கள் தங்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம்! விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

உடன்பாட்டை மீறி விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க முயற்சி! விவசாயிகள் கால்நடைகளுடன் போராட்டம்!

English Summary: Tamil Nadu Agricultural University Young Science Student Admission Consultation 2020 Published on: 07 December 2020, 06:09 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.