1. செய்திகள்

தமிழக கல்வி துறை அதிரடி, பத்தாம் வகுப்பு, + 1 மற்றும் + 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

KJ Staff
KJ Staff
State Educational Minister

2019-2020 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையினை  தமிழக கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வு தொடங்கும் நாள் மற்றும் முடிவுகள் வெளியாகும் நாள் என அனைத்து விவரங்களையும்  வெளியிடப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி வரை நடை பெறுகிறது, இதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் 24-ந்தேதி வெளியிடப்படும். அதே போன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு  மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடைபெறும், இதன் முடிவு  மே மாதம் 14-ந்தேதி வெளியிடப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை நடை பெறுகிறது, இதன் முடிவு மே 4-ந்தேதி வெளியிடப்படும்.

TN Exam Details

பிளஸ்-2 தேர்வு விவரம்

தேதி / நாள்

பாட பிரிவு

2.3.20 / திங்கள்

தமிழ்

5.3.20 /  வியாழன்

ஆங்கிலம்

9.3.20 / திங்கள்

கணிதம்/விலங்கியல்/ வணிகவியல்/நுண் உயிரியியல்/ ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாடு/ஜவுளி மற்றும் ஆடை அலங்காரம்/ உணவு மேலாண்மை/ விவசாய அறிவியல்/ நர்சிங் (பொது)/நர்சிங் (தொழில்முறை)

12.3.20 / வியாழன்

தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்)/இந்திய பண்பாடு மற்றும் கலாசாரம்/கணினி அறிவியல்/கணினி அப்ளிகேஷன்/ உயிரி வேதியியல்/ மேம்படுத்தப்பட்ட மொழி பாடம் (தமிழ்)/ மனை அறிவியல்/ அரசியல் அறிவியல்/ புள்ளியியல்

16.3.20 திங்கள்

இயற்பியல்/ பொருளாதாரம்/ கணினி தொழில் நுட்பம்

20.3.20 வெள்ளி

உயிரியியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்/ தொடக்கநிலை எலட்ரிக்கல் என்ஜினீயரிங்/ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்/ சிவில் என்ஜினீயரிங்/ ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்/ மெக்கானிக்கல் என்ஜினீயரிங்/ ஜவுளி தொழில்நுட்பம்/ அலுவலக மேலாண்மை மற்றும் செக்ரட்டரிஷிப்

24.3.20 செவ்வாய்

வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல்

 

பிளஸ்-1 தேர்வு விவரம்

தேதி / நாள்

பாட பிரிவு

4.3.20 புதன்

தமிழ்

6.3.20 வெள்ளி

ஆங்கிலம்

11.3.20 புதன்

கணிதம்/விலங்கியல்/ வணிகவியல்/நுண் உயிரியியல்/ ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாடு/ ஜவுளி மற்றும் ஆடை அலங்காரம்/ உணவு மேலாண்மை/ விவசாய அறிவியல்/ நர்சிங் (பொது)/ நர்சிங் (தொழில் முறை).

13.3.20 வெள்ளி

தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்)/ இந்திய பண்பாடு மற்றும் கலாசாரம்/ கணினி அறிவியல்/ கணினி அப்ளிகேஷன்/ உயிரி வேதியியல்/ மேம்படுத்தப்பட்ட மொழி பாடம்(தமிழ்)/ மனை அறிவியல்/ அரசியல் அறிவியல்/ புள்ளியியல்.

18.3.20 புதன்

இயற்பியல்/ பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்

23.3.20 திங்கள்

உயிரியியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்/ தொடக்கநிலை எலட்ரிக்கல் என்ஜினீயரிங்/ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்/ சிவில் என்ஜினீயரிங்/ ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்/ மெக்கானிக்கல் என்ஜினீயரிங்/ ஜவுளி தொழில்நுட்பம்/ அலுவலக மேலாண்மை மற்றும் செக்ரட்டரிஷிப்.

26.3.20 வியாழன்

வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல்.

பத்தாம் வகுப்பு தேர்வு விவரம்

தேதி / நாள்

பாடம்

17.3.20 செவ்வாய்

தமிழ் முதல் தாள்

19.3.20 வியாழன்

தமிழ் இரண்டாம் தாள்

21.3.20 சனி

விருப்ப பாடம்

27.3.20 வெள்ளி

ஆங்கிலம் முதல் தாள்

30.3.20 திங்கள்

ஆங்கிலம் இரண்டாம் தாள்

2.4.20 வியாழன்

கணிதம்.

7.4.20 செவ்வாய்

அறிவியல்.

9.4.20 வியாழன்

சமூக அறிவியல்

அனைத்து பொது தேர்வுகளும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் காலை வேளையில் மட்டுமே நடைபெறும். மேலும் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என அறிவிக்க பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Anitha Jegadeesan 
Krishi Jagran

English Summary: Tamil Nadu Board Exam 2020: 10, +11, +12 Exams Time Table Has Released By Directorate of Government Examinations Published on: 20 July 2019, 12:32 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.