தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கடந்த வாரம் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் (crop loan) தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அனைத்து தரப்பிலும் இந்த அறிவிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சியாக இருக்கிறது என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி தள்ளுபடி செய்து அரசாணையை வெளியிடப்பட்டது தமிழக அரசு.
அரசாணை வெளியீடு:
கடந்த சில தினங்களுக்கு முன் சபை விதி, 110ன் கீழ், முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) அறிவிப்பு வெளியிட்டார். அதில் , சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தை கருத்தில் வைத்து, நிலுவையில் உள்ள பயிர் கடனை (Crop loan) தள்ளுபடி செய்ய வேண்டும் என, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர். அதனை ஏற்று ''கூட்டுறவு வங்கிகளில் (Co-operative Banks),16.43 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க் கடன், 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்,'' என அறிவித்தார். நேற்று அதற்கான அரசாணையை (GO) தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பு, உடனடியாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கு நேரில் நன்றி
இந்த நிலையில் இந்த அசத்தலான வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் (Greenways Road) உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற விவசாய சங்க பிரதிநிதிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழகத்தின் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிகள் முதல்வரை சந்தித்து நன்றி கூறினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!
விவசாயிகளின் புதிய திட்டம்! போட்டோ போராட்டம் விரைவில் ஆரம்பம்!
டீக்கடைகளில் பிளாஸ்டிக் பால்! பொதுமக்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை எச்சரிக்கை!
Share your comments