கொரோனா நிவாரண நிதியின் 2ம் தவணை இன்று முதல் வழங்கப்படவுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கொரோனா நிவாரண நிதியின் 2-ம் தவணை
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் திமுக அதிக பெரும்பான்மையும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பாக 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையல், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தனது நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
இதைதொடர்ந்து அனைவருக்கும் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, கொரோனா நிதியுதவியின் 2 வது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10 பேருக்கு நிவாரண நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும், நாளை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பல திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
-
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டம்
-
கோயில்களில் வேலைபார்க்கும் பூசாரிகள்,பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி ,15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
-
கொரோனா பாதிக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உயர்த்தப்பட்ட திட்டம்
-
திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி
-
மருத்துவ மற்றும் காவலர் குடும்பங்களுக்கு நிவாரணம் நிதி
உள்ளிட்ட திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
முழு ஊரடங்கு முடிவுக்கு வரும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Share your comments