விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்பட்ட வெட்டுக்கிளிகளால் தமிழக விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். வேளாண் துறை அதிகாரிகள் தொடந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்ரிக்கா நாடுகளில் விவசாயப் பயிர்களை நாசமாக்கிய வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து பயிர்களை சர்வ நாசம் செய்து வருகிறது. இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல லட்சம் ஹெப்பரளவில் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் வெட்டுக்கிளிகள்
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி, பொன்பத்தி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பச்சை நிற வெட்டுக்கிளிகள் காணப்பட்டது. இதனை பார்த்த விவசாயிகள் இவை பாலைவன வெட்டுக்ளிகளாக இருக்குமோ என்று அச்சம் அடைந்தனர்.
இது குறித்து உடணடியாக வேளாண் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெட்டுக்கிளிகள் காணப்பட்ட வயல்வெளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
சாதாரன வெட்டுக்கிளிகள்
அய்வுக்கு பின் அதிகாரிகள் கூறுகையியல், இது வட இந்தியாவில் காணப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் (Locust) அல்ல. சாதாரணமான வெட்டுக்கிளிகள் (Grasshopper) தான் என்று தெரிவித்தனர், இதனை கண்டு விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. வெட்டுக்கிளிகள் தாக்குதல் குறித்து சந்தேகம் இருந்தால் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் வெட்டுக்கிளிகள்
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆளியூர் பகுதியில் சாகுபடி செய்த நெற்பயிர்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வேளாண்துறைக்கு அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தனர். ஆளியூர் கிராமத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் எந்த வகையைச் சேர்ந்தது என வேளாண்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று வேளாண்துறை தரப்பில் தெரிவிக்ப்பட்டு வந்தாலும். வட இந்தியாவில் காணப்படும் வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
Share your comments