1. செய்திகள்

”தமிழக மீன்’’ அங்கீகாரம் பெறும் "அயிரை மீன்” !!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit :Maalaimalar

அயிரை மீனை தமிழ்நாட்டின் மாநில மீனாக அங்கீகரிப்பதற்கான நட்டிக்கைகளில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலமும் தங்களது அதிகாரப்பூர்வ மீன்களை அடையாளம் காணுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் கேரளா கறி மீனையும், தெலுங்கானா முரல மீனையும் மாநில மீன்களாக ஏற்கனவே அங்கீகரித்து விட்டன. இந்நிலையில், தமிழகத்தின் மாநில மீனாக அயிரை மீனை (Ayirai fish) அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் (Tamil Nadu Fisheries University (TNFU) ஈடுபட்டுள்ளது.

அயிரை மீன் என்பது குளம், வாய்க்கால் மற்றும் சேறுகள் நிறைந்த சிறு ஆறுகள் போன்றவற்றில் வளரும் மீன் வகையாகும். இந்த மீன்கள் உருவத்தில் மிக சிறிய அளவில் இருக்கும். தஞ்சாவூர் மாவட்டம், வடுவூரைச் சேர்ந்த புகலேந்தி என்ற மீன் விவசாயி அயிரை மீனை குளத்தில் முதன்முதலில் வெற்றிகரமாக வளர்த்தார் இதற்கான தொழில்நுட்ப உதவியை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் வழங்கியது

அயிரை மீன் ஒட்டுமொத்தமாக உட்கொள்ளப்படுவதால் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் இது அதிகம் காணப்படுகிறது. எலும்புகள் அப்புறப்படுத்தப்படாததால் அயிராய் நுகர்வோருக்கு அதிக கால்சியம் கிடைக்கிறது டாக்டர்கள் கூறுகின்றனர்.

இந்த மீன் மருத்துவ குணமுடையதாக இருப்பதால் இதை வாங்கி சாப்பிடுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனால் விலையும் மற்ற ஆற்று மீன்களை விட அதிகமாக உள்ளது.  அயிரை மீன்கள் ஒரு கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அசைவ உணவகங்களில் இந்த வகை மீன் குழம்பு கிடைக்கிறது.இதனால் அயிரை மீனை விரைவில் தமிழக மீனாக அங்கீகாரம் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் அயிரை மீன் வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் மாதவரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பராக்காய் ஆகிய இடங்களில் அமைக்க மீன்வள பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க....

பயிர் சேத அறிக்கையை அரசிடம் ஒப்படைக்கும் வேளாண் துறை!

பன்றிகள் தொல்லை...! சேலையில் வேலி கட்டி வயலை பாதுகாக்கும் விவசாயிகள்!

விவசாயிகளே வந்துருச்சா..? இந்த ஆண்டின் கடைசி ரூ.2000/- தொகுப்பு!

English Summary: Tamil Nadu Fisheries University is involved in the process of recognizing the Ayirai fish as the state fish soon Published on: 30 November 2020, 11:24 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.