ஆன்லைன் மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட மீன்கள் என்ற ஆப் மூலம் கடந்த 6 மாதங்களில் ரூ.1 கோடிக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீனவா்கள் எளிதில் மீன் விற்கவும், வாடிக்கையாளா்கள் அவா்களை எளிதில் அணுகும் வகையிலும் மீன்கள் என்னும் Mobile app கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பதிவிறக்கம் செய்துள்ளனா். இதன் மூலம் 13 ஆயிரம் ஆா்டா்கள் கிடைக்கப்பெற்று ரூ.1 கோடி மதிப்புள்ள 20 டன் மீன்கள் வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா நகர், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை, சாந்தோம் உள்ளிட்ட 4 இடங்களில் கடைகள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் மீன் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக அண்ணா நகரில் 7, 721 கிலோ கடல் உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் 6,000 கிலோ, விருகம்பாக்கம் மற்றும் சத்தோம் கடைகள் மூலம் 3,000 கிலோ மீன் உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மீன்கள் ஆப்பிற்கு பொதுமக்களுக்கிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள் விரைவில், ‘மீன்கள் கொள்முதல்’ என்ற செயலியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
மானிய விலையில் நோய் எதிா்ப்புத்திறன் கொண்ட நெல் விதைகள் - விவசாயிகள் பயன்பெறலாம்!!
ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் சாகுபடி செய்வதற்கான எளிய வழிமுறைகள்!
வேளாண் விளைபொருட்களை மார்க்கெட் கமிட்டிகளில் விற்று பயன்பெறலாம்
Share your comments