தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் பால் நிறுவனம் அனைத்து வகையான பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியுள்ளது. நுகர்வோருக்கு தரமான பால் விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
விலை மாற்றம் குறித்த விவரங்கள்
ஆவின் பால் |
பழைய விலை |
புதிய விலை |
மாதாந்திர அட்டை பயன்படுத்துவோருக்கு நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) |
ரூ.34 |
ரூ.40 |
பச்சை (சமன்படுத்தப்பட்டது) |
ரூ.39 |
ரூ.45 |
ஆரஞ்சு (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) |
ரூ.43 |
ரூ.49 |
மெஜந்தா (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது) |
ரூ.35 |
ரூ.41 |
சில்லறை விற்பனை நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) |
ரூ.37 |
ரூ.43 |
பச்சை (சமன்படுத்தப்பட்டது) |
ரூ.41 |
ரூ.47 |
ஆரஞ்சு (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) |
ரூ.45 |
ரூ.51 |
கொள்முதல் விலை மாற்றம்
தமிழக அரசு கொள்முதல் விலையிலும் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி பசும்பால் கொள்முதல் விலையினை லிட்டருக்கு ரூ 4 உயர்துள்ளத்துள்ளது அதாவது, லிட்டருக்கு ரூ 28 - ல் இருந்து ரூ 32 ஆக உயர்த்தி உள்ளது. அதேபோன்று எருமைப்பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றிற்கு 6 உயர்த்தியுள்ளது. அதன்படி இன்று முதல் லிட்டர் ஒன்றிற்கு ரூ 35 இருந்து ரூ 41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு விளக்கம்
இந்த அதிரடி விலை உயர்வு பெரும்பாலான மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதா தலைமையிலான அரசு பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த உத்தரவிட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது என்று தெரிவிக்க பட்டுள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments