கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இது கூட்டுறவுத்துறை ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊழியர்களுக்கு போனஸ்
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பொதுத்தறை நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு கூட்டுறவு பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில், ‘லாபத்தை மட்டும் கணக்கீடு செய்யாமல், போனஸ் வழங்கும் சட்டம்(1965) அடிப்படையில் போனஸ் 8.33சதவீதமும், கருணைத் தொகை 1.67 சதவீதமும் என மொத்தத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் வழங்க வேண்டும்.
இந்த போனஸ் தொகையானது குரூப் சி, டி ஊழியர்களுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ள போனஸ் திருத்தச் சட்டம்(2015)ன் படி 2022-23 போனஸ் பெறுபவர்களின் தளர்த்தப்பட்ட ஊதிய உச்ச வரம்பு ரூ.21,000 இருக்க வேண்டும். இவர்கள் 2021-22ம் ஆண்டில் பணி புரிந்ததின் அடிப்படையில் இந்த ஆண்டு போனஸ் வழங்கப்படும்.
தீபாவளி போனஸ்
மேலும் சார்பு, மாவட்ட கூட்டுறவு சங்கங்கள், ஆரம்ப நிலை கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுபவர்களுக்கு போனஸ் வழங்கும் சட்டத்தின் படி போனஸ் மற்றும் கருணைத் தொகை பெறுவார்கள். அதே நேரத்தில் இந்த அமைப்புகளில் பணியாற்றும் துணை நிலை ஊழியர்கள் போனஸ் வழங்கும் சட்டத்தின் கீழ் போனஸ் பெற வாய்ப்பு இல்லாவிட்டாலும் கருணைத் தொகையாக ரூ.2,400 முதல் ரூ.3000 வரை கருணைத் தொகை பெறலாம்.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் அனுப்பியிருந்த வேண்டுதல் கடிதங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டடு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments