வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காவேரி டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தில் இலேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்
வரும் 24ம் தேதி முதல் வரும் 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணி, தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதிகளில் தலா 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர், விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சீர்காழி, காரைக்கால் பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும் படிக்க
மத்திய அரசின் புதிய PLI திட்டம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு
மகளிர் சுய உதவிக் குழுவில் வீட்டிற்கு ஒரு பெண்! ஏழைப் பெண்களை தொழில்முனைவோராக்கும் முயற்சி!
Share your comments